/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் சாலை மறியல் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் சாலை மறியல்
பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் சாலை மறியல்
பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் சாலை மறியல்
பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் சாலை மறியல்
ADDED : மார் 27, 2025 04:02 AM

புதுச்சேரி: மீண்டும் வேலை வழங்கக்கோரி, பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள், இரண்டு இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி பொதுப்பணித் துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள், மீண்டும் வேலை வழங்கிட வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் கொள்கை முடிவு செய்து, அனைத்து ஊழியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி நேற்று காலை புதுச்சேரி அண்ணா சிலை சந்திப்பு பகுதியில், பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் கழுத்தில் மாலை போட்டு கொண்டு சாலையில் படுத்த படி, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒதியஞ்சாலை போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.
இதேபோல், புதுச்சேரி ராஜிவ் சந்திப்பில், 30க்கும் மேற்பட்டோர் மீண்டும் பணி வழங்கிட கோரி, சாலை மறியலில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட கோரிமேடு போலீசார் அவர்களை குண்டு கண்டாக துாக்கி அப்புறப்படுத்தினர்.
இரண்டு இடங்களில் நடந்த சாலை மறியல் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.