/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரியில் பள்ளி மாணவர்கள் ஜாலி; மாலையில் சிறுதானிய மிட்டாய் புதுச்சேரியில் பள்ளி மாணவர்கள் ஜாலி; மாலையில் சிறுதானிய மிட்டாய்
புதுச்சேரியில் பள்ளி மாணவர்கள் ஜாலி; மாலையில் சிறுதானிய மிட்டாய்
புதுச்சேரியில் பள்ளி மாணவர்கள் ஜாலி; மாலையில் சிறுதானிய மிட்டாய்
புதுச்சேரியில் பள்ளி மாணவர்கள் ஜாலி; மாலையில் சிறுதானிய மிட்டாய்
ADDED : மார் 27, 2025 05:09 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு தினமும், மாலையில் சிற்றுண்டி வழங்கப்படும். அதன் படி, சிறுதானிய பிஸ்கட், சிறுதானிய மிட்டாய், எள் மிட்டாய், நிலக்கடலை மிட்டாய் போன்றவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபையில் நேற்று உயர் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்ட புதிய அறிவிப்புகளாவன: அரசு மற்றும் தனியார் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., - பி.ஏ.எம்.எஸ்., படிப்புகளில் 10 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு 2023-24ம் கல்வியாண்டு முதல், முழு கட்டண விலக்கு அளிக்கப்படும்.
அரசு ஒதுக்கீட்டில் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச கல்வியாக 100 சதவீத கல்வி கட்டணம் தள்ளுபடி செய்யப்படும். 2022 - 23ம் கல்வியாண்டு முதல் மகளிர் பொறியியல் கல்லுாரி மாணவர்களுக்கு கல்வி கட்டணம் தள்ளுபடி செய்யப்படுகிறது.
பள்ளி கல்வியில் உள்ளது போல, கல்லுாரி மாணவியர் பயன்பெறும் வகையில் பாரதிதாசன் பெண்கள் கல்லுாரி, புதுச்சேரி பல்கலை உள்ளிட்ட அனைத்து நகர, கிராமப்புற கல்லுாரிகளுக்கு இலவச பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளிக் கல்வித்துறை சார்பில் அடுத்த மாதம் முதல் அனைத்து வேலை நாட்களிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு சிறுதானிய சிற்றுண்டி வழங்கப்படும் வகையில் மாலை சிற்றுண்டி திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.
அதன்படி, சிறுதானிய பிஸ்கட், சிறுதானிய மிட்டாய், எள் மிட்டாய், நிலக்கடலை மிட்டாய், பொட்டுக்கடலை மிட்டாய் அல்லது கொண்ட கடலை மிட்டாய் வழங்கப்படும். பிரதான் மந்திரி உச்சதர் சிக் ஷா அபியான் திட்டத்தின் பாலின உள்ளடக்கம், சமபங்கு முன் முயற்சியில் புதுச்சேரி மாவட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு மத்திய கல்வி அமைச்சகம் ரூ.10 கோடி வழங்க உள்ளது. இதன் மூலம் மாணவிகளுக்கு உரிய வசதிகள் ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.