Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ துளுவ வேளாளர் நலச்சங்கத்தில் மாணவர்களுக்கு தங்க காசு பரிசளிப்பு

துளுவ வேளாளர் நலச்சங்கத்தில் மாணவர்களுக்கு தங்க காசு பரிசளிப்பு

துளுவ வேளாளர் நலச்சங்கத்தில் மாணவர்களுக்கு தங்க காசு பரிசளிப்பு

துளுவ வேளாளர் நலச்சங்கத்தில் மாணவர்களுக்கு தங்க காசு பரிசளிப்பு

ADDED : அக் 11, 2025 07:02 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி : புதுச்சேரி பிரதேச துளுவ வேளாளர் எஜூகேஷனல் அண்ட் சாரிடபுள் டிரஸ்ட், புதுச்சேரி மற்றும் காரைக்கால் துளுவ வேளாளர் நலச்சங்க திருமண தகவல் மையம் சார்பில் 17ம் ஆண்டு தங்ககாசு பரிசளிப்பு மற்றும் இலவச மங்கள சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

புதுச்சேரி ஜெயராம் திருமண நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, சங்க தலைவர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். பொருளாளர் அருள்செல்வம் வரவேற்றார். ஆலோசகர் விஸ்வநாதன், துணைத் தலைவர்கள் சேகர், ஆறுமுகம், முருகன், ராமலிங்கம், இணை செயலாளர் கணபதி முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் ரவி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

டாக்டர் ரவீந்திரன், மோகன்ராஜ், தொழிலதிபர் ஸ்ரீனிவாசன் பா.ஜ., ரவிச்சந்திரன், தமிழ்நாடு துளுவ வேளாளர் சங்க பொது செயலாளர் ராதா, முன்னாள் எஸ்.பி., ஆறுமுகம், நெய்வேலி துளுவ வேளாளர் சங்க தலைவர் ராஜகோபால், புதிய நீதிக் கட்சி புதுச்சேரி அமைப்பாளர் தேவநாதன், சென்னை டிவைன் பாரத் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் வெங்கடரமணி வாழ்த்தி பேசினர்.

அனந்தம்மாள் அறக்கட்டளை தலைவர் செல்வநாதன், சென்னை டிவைன் பாரத் சேம்பர் ஆப் காமர்ஸ் செயலாளர் ராமச்சந்திரன், குடியாத்தம் துளுவ வேளாளர் சங்க குமரேசன், நீலகண்டன் சிறப்புரை ஆற்றினர்.

விழாவில், 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு 17 கிராம் தங்ககாசுகளை மனாடெக் சேர்மன் மனநாதன், பி.ஆர்.பிரைடு உரிமையாளர் ராமமூர்த்தி, துளசி குரூப்ஸ் மதிவாணன், வெங்கடேஸ்வரா ஜூவல்லரி கிருஷ்ணமூர்த்தி, ஆனந்தா ஜூவல்லரி பரந்தாமன், வெற்றி ஜூவல்லரி வெற்றி, என்.ஆர்.காங்., காமராஜ் நகர் தொகுதி தலைவர் தணிகைவேல், சிவசக்தி ஆர்க்கிடெக் சிவவிஜயன் சிவராமன் வழங்கினர்.

சிவாலயா பிரிண்டர்ஸ் சிவபிரகாசம், அஸ்வின் வாட்டர் சதானந்தம், தண்டபாணி எலக்ட்ரிக்கல் ராஜா, சிவா கிராபிக்ஸ் முத்துக்குமார், சூரியா சப்ளையர்ஸ் பாஸ்கர், தேவராஜ் ரத்த பரிசோதனை நிலைய தேவராஜ் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன் பதிவு செய்த அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

தொடர்ந்து, துளுவ வேளாளர், அகமுடையார், வேளாளர் பிள்ளை மற்றும் வெள்ளாழ முதலியார் சமுதாயத்தினருக்கான இலவலச மங்கள சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us