/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திறன் மேம்பாட்டு பயிற்சி கவர்னர் துவக்கி வைப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி கவர்னர் துவக்கி வைப்பு
திறன் மேம்பாட்டு பயிற்சி கவர்னர் துவக்கி வைப்பு
திறன் மேம்பாட்டு பயிற்சி கவர்னர் துவக்கி வைப்பு
திறன் மேம்பாட்டு பயிற்சி கவர்னர் துவக்கி வைப்பு
ADDED : மார் 27, 2025 03:49 AM

புதுச்சேரி: புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில், எய்ட்ஸ் பற்றி திறன் மேம்பாட்டு பயிற்சியை, கவர்னர் கைலாஷ்நாதன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
தனியார் ஓட்டலில் நடந்த எச்.ஐ.வி., எய்ட்ஸ் குறித்து, திறன் மேம்பாட்டு பயிற்சியை கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைத்தார். சுகாதாரத்துறை செயலர் ஜெயந்த் குமார் ரே வரவேற்றார். அமைப்பின் துணை இயக்குனர் அனுாப் குமார் பூரி நோக்கவுரை வழங்கினார்.
எய்ட்ஸ் பற்றி விழிப்புணர்வு அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடையும் வகையில், நோய் பரவும் முறை, அதனை தடுக்கும் முறைகள் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.
சங்கத்தின் மூலம், தொலைக்காட்சி, வானொலி, சமூக வளைதளங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை இயக்குனர் ரவிச்சந்திரன், மருத்துவ கண்காணிப்பாளர் செவ்வேள், மருத்துவர்கள், உதயசங்கர், ஐயப்பன், சங்க இணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, ஷிவானி, காங்கேயன் உட்படபலர் பல்வேறு கல்லுாரிகளின் முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.