/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பெண்ணையாறு, சங்கராபரணி ஆறுகளில் உபரி நீரை சேமிக்க கதவணை அமைக்க திட்டம் அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல் பெண்ணையாறு, சங்கராபரணி ஆறுகளில் உபரி நீரை சேமிக்க கதவணை அமைக்க திட்டம் அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்
பெண்ணையாறு, சங்கராபரணி ஆறுகளில் உபரி நீரை சேமிக்க கதவணை அமைக்க திட்டம் அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்
பெண்ணையாறு, சங்கராபரணி ஆறுகளில் உபரி நீரை சேமிக்க கதவணை அமைக்க திட்டம் அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்
பெண்ணையாறு, சங்கராபரணி ஆறுகளில் உபரி நீரை சேமிக்க கதவணை அமைக்க திட்டம் அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்
பொது சுகாதாரம்
நகர பகுதியில் நிலவும் குடிநீர் உவர்ப்பு தன்மையை தீர்க்க, 300 மீட்டருக்கு அதிகமான ஆழத்திற்கு 40 போர்வேல் ரூ. 20 கோடியில் நிறுவப்படும். இதற்காக சங்கராபரணி ஆற்றின் கரையில் 14 போர்வேல் அமைக்க ரூ. 5.5 கோடிக்கு நிதி உதவி கோரப்பட்டுள்ளது. இதன் மூலம் முத்தியால்பேட்டை, ராஜ்பவன், உருளையன்பேட்டை, உப்பளம், முதலியார்பேட்டை, நெல்லித்தோப்பு, காமராஜர் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தரமான குடிநீர் வழங்கப்படும்.
பாதாள சாக்கடை
சாக்கடை கால்வாய்கள் அடைப்புகளை அகற்ற ரூ. 5.27 கோடி மதிப்பில் 19 கழிவுநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வாங்க அனுமதி பெற்று, 6 இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது. கனகன் ஏரி சுத்திகரிப்பு நிலையத்தில் ரூ. 2.39 கோடி மதிப்பில் துர்நாற்றத்தை கட்டுப்படுத்தும் இயந்திரம், காற்றோட்ட அமைப்புகளை மாற்றுவதற்கு ரூ.2.74 கோடிக்கு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
நீர்பாசனம்
கடல் அரிப்பை தடுக்க நபார்டு வங்கி நிதி உதவியுடன், சின்ன காலாப்பட்டு, பெரிய காலாப்பட்டு, கணபதிசெட்டிக்குளம், பிள்ளைச்சாவடியில் ரூ. 33 கோடி மதிப்பில் தடுப்பு அரண் அமைக்கப்பட்டு வருகிறது.
சாலை பணிகள்
இந்திரா சிக்னல் முதல் ராஜிவ் சிக்னலை இணைக்கும் மேம்பாலம் அமைக்கவும், கடலுார் சாலையில் மரப்பாலம் முதல் முள்ளோடை வரை அகலப்படுத்தி மேம்படுத்தவும் ரூ.1,000 கோடி திட்டத்திற்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. விரைவில் இப்பணிகள் துவங்கும். புதுச்சேரி மற்றும் காரைக்கால் கிராமப்புறங்களில் 107 கி.மீ., சாலையை மேம்படுத்த ரூ. 67.02 கோடிக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.
கட்டட பணிகள்
பழைய சாராய ஆலை வளாகம் ரூ. 5.86 கோடி மதிப்பில் கவர்னர் அலுவலகமாக மாற்றும் பணி முடியும் தருவாயில் உள்ளது. ராஜ் நிவாஸ் மறுசீரமைப்பு கட்டமைப்பு வலுப்படுத்தும் பணிகள் ரூ. 16 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும்.