Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அரசு பள்ளி மாணவர்கள் களப்பயணம்

அரசு பள்ளி மாணவர்கள் களப்பயணம்

அரசு பள்ளி மாணவர்கள் களப்பயணம்

அரசு பள்ளி மாணவர்கள் களப்பயணம்

ADDED : பிப் 01, 2024 11:35 PM


Google News
புதுச்சேரி: கொம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி, சமுதாய நலப்பணி திட்டம் சார்பில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து மாணவர்கள் ஆரோவில்லில் களப்பயணம் மேற்கொண்டனர்.

பயணத்தை தலைமை ஆசிரியர் குமார் துவக்கி வைத்தார். பொறுப்பாசிரியர் பிரபாகர் களப்பயணத்தில் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தார். சமுதாய நலப் பணித்திட்ட தன்னார்வலர்கள், ஆரோவில் தாவரவியல் பூங்காவில் உள்ள மரங்கள், கள்ளிச்செடிகள், காடுகள், வண்ணத்துப்பூச்சிகள், தோட்டம், புதுத் தோட்டம் ஆகிய இடங்களை சுற்றி பார்த்து பயனடைந்தனர்.

தாவர இனங்களின் வகைகளை சத்தியமூர்த்தி விளக்கினார். சமுதாய நலப்பணித்திட்ட மண்டல ஒருங்கிணைப்பாளர் மதிவாணன், மையம் அறக்கட்டளை நிறுவனர் பாலகங்காதரன், அலுவலக ஊழியர் ராஜேஸ்வரி, சமுதாய நலப்பணித்திட்ட அலுவலர் அய்யப்பன் ஆகியோர் மாணவர்களை வழி நடத்தினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us