ADDED : செப் 24, 2025 06:10 AM
நெட்டப்பாக்கம் : தொழிலாளர் துறை, வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நெட்டப்பாக்கம் கம்பன் அரசுப் பள்ளியில் நடந்தது.
பள்ளி துணை முதல்வர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். விரிவுரையாளர் எழில்வேந்தன் வரவேற்றார். வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரி காமராஜ் கோபு, பிளஸ் 2 படிப்பிற்கு பிறகு உயர்கல்வியில் உள்ள வழிகள், குறித்து விளக்கினார். நுாலகர் கலியமூர்த்தி நன்றி கூறினார்.