/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இந்திய கைப்பந்து கூட்டமைப்பு புதிய நிர்வாகிகள் தேர்வு இந்திய கைப்பந்து கூட்டமைப்பு புதிய நிர்வாகிகள் தேர்வு
இந்திய கைப்பந்து கூட்டமைப்பு புதிய நிர்வாகிகள் தேர்வு
இந்திய கைப்பந்து கூட்டமைப்பு புதிய நிர்வாகிகள் தேர்வு
இந்திய கைப்பந்து கூட்டமைப்பு புதிய நிர்வாகிகள் தேர்வு
ADDED : ஜூன் 12, 2025 12:35 AM

புதுச்சேரி : இந்திய கைப்பந்து கூட்டமைப்பு செயற்குழு உறுப்பினராக புதுச்சேரி வாலிபால் சங்க செயலாளர் ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய கைப்பந்து கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்தல் கடந்த 7ம் தேதி டில்லியில் நடந்தது. இதில் இந்திய கைப்பந்து கூட்டமைப்பு தலைவராக வீரேந்தர் கன்வார், துணை தலைவர்களாக ஹன்மநாத் ரெட்டி, சுசாந்தா பிஸ்வா சர்மா, பொதுச் செயலாளராக ராமானந்த் சவுத்ரி, பொருளாளராக ஹரிசிங்சவுகான் தேர்வு செய்யப்பட்டனர்.
இணைச் செயலாளர்களாக ஆனந்த்ஷங்கர், ராஜன்ஸ் குல்தீப் வாட்ஸ், செயற்குழு உறுப்பினர்களாக புதுச்சேரி வாலிபால் சங்க செயலாளர் ராமதாஸ், பினோய் ஜோசப், மித்லேஷ்குமார் சிங், உத்தம்ராஜ், பார்த்தா தாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய கைப்பந்து பெடரேஷன் செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட ராமதாஸ் சபாநாயகர் செல்வத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.