/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ லாரி - வேன் மோதல் போக்குவரத்து பாதிப்பு லாரி - வேன் மோதல் போக்குவரத்து பாதிப்பு
லாரி - வேன் மோதல் போக்குவரத்து பாதிப்பு
லாரி - வேன் மோதல் போக்குவரத்து பாதிப்பு
லாரி - வேன் மோதல் போக்குவரத்து பாதிப்பு
ADDED : மே 20, 2025 11:43 PM
புதுச்சேரி : ஜல்லி லோடு ஏற்றி சென்ற லாரி, வேன் மீது மோதிய விபத்தால் நுாறடி சாலையில் போக்குவரத்து பாதித்தது.
திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரி வழியாக கடலுாருக்கு, நேற்று காலை டாரஸ் லாரி ஒன்று ஜல்லி ஏற்றி சென்று கொண்டிருந்தது. நுாறடி சாலை, ராஜிவ்காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை அருகே சென்ற போது, அண்ணா நகரில் இருந்து குறுக்கே வந்த வேன் மீது லாரி மோதியது. இந்த விபத்தில், வேன் பலத்த சேதமானது.
தகவலறிந்து, வந்த போக்குவரத்து போலீசார் விபத்தில் சிக்கிய இரண்டு வாகனங்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால், அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.