/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ரூ.3.50 கோடி மோசடியில் சென்னை பொறியாளர் கைது ரூ.3.50 கோடி மோசடியில் சென்னை பொறியாளர் கைது
ரூ.3.50 கோடி மோசடியில் சென்னை பொறியாளர் கைது
ரூ.3.50 கோடி மோசடியில் சென்னை பொறியாளர் கைது
ரூ.3.50 கோடி மோசடியில் சென்னை பொறியாளர் கைது
ADDED : மே 21, 2025 02:07 AM

புதுச்சேரி:புதுச்சேரியில், டிரேடிங் செயலியை விற்பதாகக் கூறி, 3.50 கோடி மோசடி செய்த சென்னை பொறியாளரை 'சைபர் கிரைம்' போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியை சேர்ந்த ஜெயராஜ், மொபைல் போனில் ஆன்லைன் விளம்பரத்தை பார்த்துள்ளார்.
அதில், அல்கோ டிரேடிங் என்ற நிறுவனத்தின் இணையதளத்தில், பங்குச்சந்தையில் தானியங்கி முறையில் பங்குகளை வாங்கி, விற்கும் மென்பொருள் செயலி உள்ளதாகவும், 40,000 ரூபாய் செலுத்தினால், ஆன்லைன் வாயிலாக செயலி அனுப்பப்படும் என்றும் கூறியுள்ளனர்.
அது எவ்வாறு செயல்படுகிறது என்று செயல் விளக்கமும் கொடுக்கப்படும் என்றும் விளம்பரம் செய்துள்ளனர். நம்பிய ஜெயராஜ், அல்கோ டிரேடிங் நிறுவனத்தை தொடர்பு கொண்டு, மூன்று தவணைகளாக 40,000 ரூபாய் செலுத்தினார்.
பின், அந்த நிறுவனத்திலிருந்து எந்தவித செயல்முறை விளக்கமும், மென்பொருள் செயலியும் வரவில்லை.
ஜெயராஜ் புகாரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
மோசடியில் ஈடுபட்டவர் சென்னை, நீலாங்கரையை சேர்ந்த அஸ்வின் விக்னேஷ், 32, என்பதும், பொறியியல் பட்டதாரியான இவர், நாடு முழுதும் 1,000க்கும் மேற்பட்டோரிடம் இதுபோன்று மென்பொருள் செயலியை விற்பதாகக் கூறி, 3.50 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளதும் தெரியவந்தது.
தனிப்படை போலீசார், சென்னை, சோழிங்கநல்லுாரில் பதுங்கியிருந்த அஸ்வின் விக்னேஷை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடமிருந்து, 14 லேப்டாப், கார், 7.60 லட்சம் ரொக்கம், மின்சாதனப் பொருட்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
மோசடி தொடர்பாக, அவரது மனைவி, நண்பர்கள் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்டோர் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
அந்நிறுவனத்தில் பணிபுரிந்த நபர்கள், வங்கி கணக்கு கொடுத்து உதவிய நபர்களையும் கைது செய்யும் நடவடிக்கையில், போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.