ADDED : மே 21, 2025 02:54 AM
புதுச்சேரி:மதுரை மாநகர் பா.ஜ., ஊடக பிரிவு துணைத்தலைவர் முத்துவிக்னேஷ்வரன், 39. இவர், ஊடக பிரிவு மாவட்ட நிர்வாகிகள் வேல்பாண்டி, பாலசுப்ரமணி, சீனிவாசன், செந்தில் ஆகியோருடன் 18ம் தேதி, புதுச்சேரி வந்து, கோலாஸ் நகரில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினர்.
நேற்று முன்தினம் ஆரோவில் கடற்கரைக்கு சென்றுவிட்டு, இரவு, 7:00 மணிக்கு விடுதி வந்தபோது, முத்து விக்னேஸ்வரன் காரிலேயே ஓய்வு எடுத்துவிட்டு வருவதாக தெரிவித்தார்.
மற்ற நான்கு பேரும் அறைக்கு சென்றுவிட்டு, இரவு, 9:30 மணிக்கு வந்து பார்த்தபோது, முத்து விக்னேஸ்வரன் காரில் இறந்து கிடந்தார். ஒதியஞ்சாலை போலீசார் விசாரிக்கின்றனர்.