ADDED : செப் 25, 2025 03:51 AM
புதுச்சேரி : பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ரெட்டியார்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.
மூலக்குளம் தனியார் பார் அருகில் வாலிபர் ஒருவர் கத்தியை வைத்து கொண்டு பொதுமக்களை மிரட்டுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் அந்த வாலிபர் தப்பியோட முயன்றார். அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர், மூலகுளம் குண்டு சாலை சேர்ந்த பிரபாகரன், 29, என்பதும், இவர் கத்தி வைத்துக் கொண்டு பொதுமக்களை மிரட்டியது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்து, அவரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்தனர்.