/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாலை மேம்பாட்டு பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு சாலை மேம்பாட்டு பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
சாலை மேம்பாட்டு பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
சாலை மேம்பாட்டு பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
சாலை மேம்பாட்டு பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : செப் 25, 2025 03:52 AM

பாகூர் : பாகூர் மற்றும் குருவிநத்தம் கிராமத்தில் சாலை மேம்பாட்டு பணிகளை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம், பாகூர் தொகுதி, பாகூர் காந்தி நகரில் 17 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் செலவில் தார் சாலை அமைத்தல், குருவிநத்தம் பிடாரி அம்மன் கோவில் வீதியில் 3 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் செலவில் சிமென்ட் சாலை, வடிகால் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது. செந்தில்குமார் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து, பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து இளநிலை பொறியாளர் புனிதவதி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.