ADDED : மே 20, 2025 11:38 PM
புதுச்சேரி : தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், ராயபுதுபாக்கம், திரவுபதியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் மதியழகன், 37. கூலி தொழிலாளி. இவர் இரு தினங்களுக்கு முன், ஆலங்குப்பத்தில் உள்ள ஒரு கடையில் உணவு வாங்கி கொண்டிருந்தார். அங்கு வந்த வில்லியனுார் உளவாய்க்கால் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் கூட்டாளிகள் மதியழகனை இழிவாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தனர். மதியழகன் புகாரின் பேரில், சந்திரசேகர் உள்ளிட்டோர் மீது தன்வந்திரி நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.