/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஜி.எஸ்.டி., வரி சீர்திருத்தத்தால் புதுச்சேரி அரசுக்கு வருவாய் இழப்பு ஜி.எஸ்.டி., வரி சீர்திருத்தத்தால் புதுச்சேரி அரசுக்கு வருவாய் இழப்பு
ஜி.எஸ்.டி., வரி சீர்திருத்தத்தால் புதுச்சேரி அரசுக்கு வருவாய் இழப்பு
ஜி.எஸ்.டி., வரி சீர்திருத்தத்தால் புதுச்சேரி அரசுக்கு வருவாய் இழப்பு
ஜி.எஸ்.டி., வரி சீர்திருத்தத்தால் புதுச்சேரி அரசுக்கு வருவாய் இழப்பு
ADDED : செப் 24, 2025 06:13 AM
புதுச்சேரி : மத்திய அரசின் ஜி.எஸ்.டி., வரி குறைப்பால், புதுச்சேரி அரசுக்கு ரூ.200 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் என கருதப்படுகிறது.
புதுச்சேரிக்கு கடந்த காலங்களில் மத்திய அரசு பல்வேறு சலுகைகள் வழங்கியது. இதனால், கட்டுமான பொருட்கள், அலங்கார பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், வாகனங்கள், ரசாயனம், மருந்து என அனைத்து பொருட்களும் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களை விட புதுச்சேரியில் வரி குறைவாக இருந்தது.
இதனால், தமிழக மக்கள் புதுச்சேரிக்கு வந்து பொருட்களை வாங்கி சென்றதால், அரசுக்கு வரி வருவாய் அதிகமாக இருந்தது. இந்நிலையில், மத்திய அரசு வாட், சமச்சீர் வரி மற்றும் ஜி.எஸ்.டி., வரி விதிப்பால், பிற மாநிலங்களுக்கு இணையாக புதுச்சேரியிலும் வரி விதிக்கப்பட்டது. இதனால், புதுச்சேரியில் வியாபாரம் வெகுவாக குறைந்தது.
இந்நிலையில் மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த ஜி.எஸ்.டி., வரி சீரமைப்பு நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்துள்ளது.
அதில், நான்கு வகை வரியை தற்போது இரு வகையாக மாற்றப்பட்டுள்ளது. 28 சதவீதத்தில் இருந்த ஜி.எஸ்.டி., வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், புதுச்சேரி அரசுக்கு வரும் ஜி.எஸ்.டி., வரி வருவாய் வெகுவாக குறையும் என கருதப்படுகிறது.
இதுகுறித்து அமைச்சர் லட்சுமிநாராயணன் கூறுகையில், 'மத்திய அரசு தற்போது ஜி.எஸ்.டி., வரியை குறைத்துள்ளதால், இந்த நிதியாண்டில் புதுச்சேரி அரசுக்கு ரூ.180 கோடி முதல் 200 கோடி வரை வருவாய் குறைய வாய்ப்புள்ளது.
அதே நேரத்தில் மத்திய அரசு வருமான வரி உச்சவரம்பை உயர்த்தியுள்ளதால், மக்களுக்கு வருமானம் அதிகரித்துள்ளது. ஜி.எஸ்.டி., வரி குறைப்பால் பொருட்களின் விலை குறைந்துள்ளது. இதனால், வியாபாரம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
அதனால், அரசிற்கு வரவேண்டிய வரி வருவாய் குறைந்து ள்ளதா அல்லது அதிகரித்துள்ளதா என்பது இந்த நிதி ஆண்டு இறுதியில் தான் தெரிய வரும்' என்றார்.