Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சிகிச்சையில் இருந்த மூதாட்டி மரணம் உறவினர்கள் முற்றுகையால் பரபரப்பு

சிகிச்சையில் இருந்த மூதாட்டி மரணம் உறவினர்கள் முற்றுகையால் பரபரப்பு

சிகிச்சையில் இருந்த மூதாட்டி மரணம் உறவினர்கள் முற்றுகையால் பரபரப்பு

சிகிச்சையில் இருந்த மூதாட்டி மரணம் உறவினர்கள் முற்றுகையால் பரபரப்பு

ADDED : செப் 24, 2025 06:14 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி : அரியாங்குப்பம் அடுத்த ஓடவெளியை சேர்ந்தவர் சாந்தா (எ) நீலம்மாள், 66. இவர், கடந்த 16ம் தேதி, வீட்டில் தவறி விழுந்து படுகாயமடைந்தார். உடன் அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று மதியம் 2:30 மணியளவில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

அவரது உறவினர்கள் மருத்துவமனை முன் திரண்டு,சரியான முறையில் சிகிச்சை அளிக்காததால், மூதாட்டி இறந்துள்ளார். மருத்துவமனையில், போதிய அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறி , மருத்துவமனையை, முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரியக்கடைபோலீசார், பேச்சு வார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதையடுத்து, போராட்டம் செய்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us