Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அ.தி.மு.க., வேட்பாளரை ரங்கசாமி ஆதரிக்க வேண்டும் மாநில செயலாளர் அன்பழகன் பேச்சு

அ.தி.மு.க., வேட்பாளரை ரங்கசாமி ஆதரிக்க வேண்டும் மாநில செயலாளர் அன்பழகன் பேச்சு

அ.தி.மு.க., வேட்பாளரை ரங்கசாமி ஆதரிக்க வேண்டும் மாநில செயலாளர் அன்பழகன் பேச்சு

அ.தி.மு.க., வேட்பாளரை ரங்கசாமி ஆதரிக்க வேண்டும் மாநில செயலாளர் அன்பழகன் பேச்சு

ADDED : பிப் 11, 2024 02:11 AM


Google News
புதுச்சேரி: மாநில அந்தஸ்து வழங்காத பா.ஜ., கூட்டணியில் இருந்து ரங்கசாமி வெளியேற வேண்டும் என, அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் பேசினார்.

புதுச்சேரி அ.தி.மு.க., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவர், பேசியதாவது:

புதுச்சேரி மாநிலத்துக்கு 3 ஆண்டுகளாக பொறுப்பு கவர்னர் தான் உள்ளார். மத்திய நிதிக்குழுவில் புதுச்சேரி சேர்க்கப்படாததால் உரிய நிதி பங்கீடு கிடைக்கவில்லை.

மத்திய பல்கலைக் கழகத்தில் அனைத்து பாடப்பிரிவுகளிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. ஜிப்மர் உள்ளிட்ட மத்திய அரசின் நிறுவனங்களில் நம் மாநிலத்தவர்களுக்கு உரிய உள் ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. 90 சதவீதமாக இருந்த மத்திய அரசின் நிதியுதவி படிப்படியாக குறைக்கப்பட்டு இன்று 10 சதவீதமே வழங்குகிறது.

உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை. ரேஷன் கடைகள் திறக்கவில்லை. மின்துறையை தனியார் மயமாக்க முயற்சிக்கின்றனர். மக்கள் வரிப்பணம் ரூ.400 கோடியில் தனியாருக்கு சாதகமாக பிரிபெய்டு மீட்டர் திட்டத்தை கொண்டு வருகின்றனர்.

சுற்றுலா என்ற பெயரில் கலாச்சார சீரழிவு நடக்கிறது. இலவச சைக்கிள், லேப்டாப் வழங்குவதில், மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. லேப்டாப் கொள்முதல் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

மாநில அந்தஸ்து வழங்காத பா.ஜ., கூட்டணியில் இருந்து ரங்கசாமி வெளியேற வேண்டும். அவர் தனியாக வேட்பாளரை நிறுத்த வேண்டும் அல்லது அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரிக்க வேண்டும்.

புதுச்சேரி உட்பட 40 லோக்சபா தொகுதிகளிலும் அ.தி.மு.க., வெற்றி பெறும்.

தேர்தலுக்கு பிறகு நாட்டின் பிரதமரை தேர்ந்தெடுக்கும் தேசிய தலைவராக பழனிசாமி உருவெடுப்பார். இவ்வாறு அவர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us