/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நெல்லித்தோப்பில் மீண்டும் குடிநீரில் கழிவுநீர் கலப்பு; 3 பேர் கவலைக்கிடம் : 7 பேருக்கு தீவிர சிகிச்சை சீரமைப்பு பணியில் பொதுப்பணித்துறை மும்முரம் நெல்லித்தோப்பில் மீண்டும் குடிநீரில் கழிவுநீர் கலப்பு; 3 பேர் கவலைக்கிடம் : 7 பேருக்கு தீவிர சிகிச்சை சீரமைப்பு பணியில் பொதுப்பணித்துறை மும்முரம்
நெல்லித்தோப்பில் மீண்டும் குடிநீரில் கழிவுநீர் கலப்பு; 3 பேர் கவலைக்கிடம் : 7 பேருக்கு தீவிர சிகிச்சை சீரமைப்பு பணியில் பொதுப்பணித்துறை மும்முரம்
நெல்லித்தோப்பில் மீண்டும் குடிநீரில் கழிவுநீர் கலப்பு; 3 பேர் கவலைக்கிடம் : 7 பேருக்கு தீவிர சிகிச்சை சீரமைப்பு பணியில் பொதுப்பணித்துறை மும்முரம்
நெல்லித்தோப்பில் மீண்டும் குடிநீரில் கழிவுநீர் கலப்பு; 3 பேர் கவலைக்கிடம் : 7 பேருக்கு தீவிர சிகிச்சை சீரமைப்பு பணியில் பொதுப்பணித்துறை மும்முரம்
ADDED : செப் 24, 2025 05:50 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் மீண்டும் சுகாதாரமற்ற குடிநீரை குடித்த பலர் வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சீரமைப்பு பணியில் பொதுப்பணித் துறையினர் ஈடுபட்டுள்ளனர். உருளையன்பேட்டை மற்றும் நெல்லித்தோப்பு தொகுதிகளில் கடந்த 7ம் தேதி பலருக்கு வயிற்று போக்கு ஏற்பட்டது. அவர்களில் மூவர், மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தனர். பலர், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.
அதனைத் தொடர்ந்து, பொதுப்பணித்துறையினர் ஒரு வாரம் மேற்கொண்ட ஆய்வில், முத்தரையர்பாளையத்தில் இருந்து நகரப் பகுதிக்கு வரும் குடிநீர் குழாயில், சக்தி நகர் 8 மற்றும் 9வது குறுக்கு வீதிகளுக்கு செல்லும் குழாய், வாய்க்கால் பகுதியில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் கலப்பதை கடந்த 14ம் தேதி கண்டுபிடித்து சீரமைத்தனர்.
குடிநீரில் கழிவு நீர் கலந்த விவகாரத்தை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தின. பெரும் கலோபரங்களை ஏற்படுத்திய குடிநீரில் கழிவு நீர் கலப்பு விவகாரம் சற்று ஓய்ந்த நிலையில் நேற்று நெல்லித்தோப்பு தொகுதியில் பெரியார் நகர், ராஜய்யா தோட்டம், புது அய்யனார் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 10க்கும் மேற்பட்டடோர் நேற்று வயிற்று போக்கால் பாதித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். அவர்களில், 3 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவலறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் புது அய்யனார் கோவில் தெரு, தோட்டக்கால் மற்றும் ராஜய்யா தோட்டம் பகுதியில் நகராட்சி சார்பில், கழிவு நீர் கால்வாய் கட்டும் பணிக்காக பள்ளம் தோண்டியபோது, குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் கலந்திருப்பது கண்டுபிடித்து, சீரமைப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.