ADDED : செப் 23, 2025 11:40 PM
அரியாங்குப்பம் : அரியாங்குப்பம் கொம்யூன் சார்பில், துாய்மை பணி குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
இருவார துாய்மை பணி நிகழ்ச்சியையொட்டி, பல இடங்களில் துாய்மை பணி குறித்து, நகராட்சி மற்றும் கொம்யூன் சார்பில், விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அதன்படி, அரியாங்குப்பம் கொம்யூன் சார்பில், துாய்மை பணி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ஆணையர் ரமேஷ் தலைமை தாங்கினார். பள்ளி மாணவர்கள், குப்பைகளை வெளியில் போட வேண்டாம். மரங்களை வெட்டக்கூடாது என, முழக்கமிட்டபடி, கொம்யூன் அலுவலகத்தில் இருந்து பிரம்மன் சிலை வரை ஊர்வலமாக சென்றனர்.
உதவிப்பொறியாளர் நாகராஜன், இளநிலைப்பொறியாளர் சரஸ்வரதி, ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.