/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரியில் யாருடனும் கூட்டணி பேசவில்லை த.வெ.க., பொது செயலாளர் ஆனந்த் தகவல் புதுச்சேரியில் யாருடனும் கூட்டணி பேசவில்லை த.வெ.க., பொது செயலாளர் ஆனந்த் தகவல்
புதுச்சேரியில் யாருடனும் கூட்டணி பேசவில்லை த.வெ.க., பொது செயலாளர் ஆனந்த் தகவல்
புதுச்சேரியில் யாருடனும் கூட்டணி பேசவில்லை த.வெ.க., பொது செயலாளர் ஆனந்த் தகவல்
புதுச்சேரியில் யாருடனும் கூட்டணி பேசவில்லை த.வெ.க., பொது செயலாளர் ஆனந்த் தகவல்
ADDED : செப் 04, 2025 05:15 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் யாருடனும் கூட்டணி பேசவில்லை என, த.வெ.க., பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கை:
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வழிகாட்டுதலின்படி, வரும் 2026 தமிழக சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கான வியூகங்கள் அமைத்து தேர்தலை சந்திக்க த.வெ.க., தயாராகி வருகிறது.
இந்நிலையில், 2026 சட்டசபை தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான முதன்மை சக்தியாக ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவை த.வெ.க., பெற்று வருவதை மடைமாற்றம் செய்யும் நோக்கில், அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை கொண்டு, புதுச்சேரியில் த.வெ.க., கூட்டணி என, உண்மைக்கு புறம்பான தகவல் வெளியாகி உள்ளது.
இது முற்றிலும் தவறானது. இந்த வதந்தியை மக்கள் புறக்கணித்துவிடுவார்கள். கூட்டணி தொடர்பாக த.வெ.க., புதுச்சேரியில் யாருடனும் பேச்சுவார்த்தை யில் ஈடுபடவில்லை. த.வெ.க.,வில் புது ச்சேரி மாநில பொறுப்பாளர்களின் விபரங்களை கட்சி தலைவர் விரைவில் அறிவிப்பார். தேர்தல் நிலைப்பாடும் கட்சி தலைவரின் முடிவே இறுதியானது.
எனவே , மக்களை குழப்பும் நோக்கி ல் த.வெ.க., தொடர்பாக யூகங்கள் அடிப்படையில் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்புவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.