/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ துார் வாரும் பணிய தடுத்ததால் கிராம மக்கள் சாலை மறியல் துார் வாரும் பணிய தடுத்ததால் கிராம மக்கள் சாலை மறியல்
துார் வாரும் பணிய தடுத்ததால் கிராம மக்கள் சாலை மறியல்
துார் வாரும் பணிய தடுத்ததால் கிராம மக்கள் சாலை மறியல்
துார் வாரும் பணிய தடுத்ததால் கிராம மக்கள் சாலை மறியல்
ADDED : செப் 24, 2025 06:15 AM
திருபுவனை : புதுச்சேரி திருபுவனை அருகேஜே.சி.எம்., மக்கள் மன்றத்தில் சார்பில் நடந்தகழிவுநீர் வாய்க்கால் துார் வாரும் பணியை தடுத்து நிறுத்திய உள்ளாட்சித்துறை ஊழியர்களைக் கண்டித்து கிராம மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருபுவனை தொகுதி முழுதும் மழைக்காலத்தையொட்டி ஜே.சி.எம்., மக்கள் மன்றத்தின் சார்பில் கழிவுநீர் வாய்க்கால் துார்வரும் பணி கடந்த 21ம் தேதி தொடங்கியது.
இந்நிலையில் அரசியல் காரணங்களுக்கான ஜே.சி.எம்., மக்கள் மன்றத்தின் சார்பில் நடந்த துார்வாரும் பணியை உள்ளாட்சித்துறை ஊழியர்கள் நேற்று தடுத்து நிறுத்தினர்.
தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் திருபுவனைபாளையம் - கடலுார் சாலையில் 11:00 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர்.
பல ஆண்டுகளாக இப்பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் துார்வாரப்படாமல் வாய்க்கால் முழுதும் பிளாஸ்டிக் குப்பைகளால் துார்ந்து கிடக்கிறது. இதனால்கொசுத்தொல்லையால் மக்கள் அவதியுற்று வருகின்றனர். இந்நிலையில் ஜே.சி.எம்., மக்கள் மன்றத்தின் சார்பில், பொதுமக்கள் நலன்கருதி, கழிவுநீர் வாய்க்கால் துார்வாரும் பணியை மேற்கொண்ட நிலையில், அதிகாரிகள் அரசியல் காரணங்களுக்காக பணியை தடுத்து நிறுத்தியுள்ளதாக குற்றம் சாட்டி, உள்ளாட்சித்துறை ஊழியர்களிடம் பொது மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் திருபுவனை போலீசார் பேசி சமாதானம் செய்ததை அடுத்து, 11:30 மணியளவில் மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.