Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/டென்னிஸ்/தக்சினேஸ்வர் 'சாம்பியன்'

தக்சினேஸ்வர் 'சாம்பியன்'

தக்சினேஸ்வர் 'சாம்பியன்'

தக்சினேஸ்வர் 'சாம்பியன்'

ADDED : அக் 07, 2025 11:09 PM


Google News
Latest Tamil News
வின்ஸ்டன்-சலேம்: அமெரிக்காவில் ஆண்களுக்கான வின்ஸ்டன்-சலேம் டென்னிஸ் ஐ.டி.எப்., தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவு பைனலில், இத்தொடரின் 'நம்பர்-2' அந்தஸ்து பெற்ற, இந்தியாவின் தக்சினேஸ்வர், இத்தொடரின் 'நம்பர்-8' வீரர், ஜப்பானின் ஷுன்சுகே மிட்சுயை எதிர்கொண்டார்.

முதல் செட்டை தக்சினேஸ்வர், 6-0 என எளிதாக கைப்பற்றினார். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட இவர், அடுத்த செட்டையும் 6-3 என வசப்படுத்தினார். முடிவில் தக்சினேஸ்வர், 6-0, 6-3 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று சாம்பியன் ஆனார். இத்தொடரில் தொடர்ந்து வென்ற இரண்டாவது கோப்பை இது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us