/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ தாழ்வாக செல்லும் மின்கம்பி உயர்த்தி அமைக்க கோரிக்கை தாழ்வாக செல்லும் மின்கம்பி உயர்த்தி அமைக்க கோரிக்கை
தாழ்வாக செல்லும் மின்கம்பி உயர்த்தி அமைக்க கோரிக்கை
தாழ்வாக செல்லும் மின்கம்பி உயர்த்தி அமைக்க கோரிக்கை
தாழ்வாக செல்லும் மின்கம்பி உயர்த்தி அமைக்க கோரிக்கை
ADDED : ஜூன் 29, 2024 11:58 PM

அச்சிறுபாக்கம்:தொழுப்பேட்டில் இருந்து ஒரத்தி, வந்தவாசி வழியாக, காஞ்சிபுரம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில், கடமலைப்புத்துார் ஊராட்சி அமைந்துள்ளது.
கடமலைப்புத்துார் ஏரி கலங்கள் வழியாக உபரி நீர் செல்லும் கால்வாய் பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தை ஒட்டி, குடியிருப்புகளுக்கு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த, மின் ஒயர்கள் மிகவும் தாழ்வாக உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. கைக்கு எட்டும் தூரத்தில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன.
மேலும், சாலையின் எதிர்திசையில் வாகனங்கள் வரும் நேரங்களில், மற்ற வாகனங்கள் பாலத்தின் ஓரம் ஒதுங்க முடியாத நிலை உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, தாழ்வாக செல்லும் மின்கம்பியை உயர்த்தி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.