/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பூயிலுப்பையில் ஆக்கிரமிப்பை தடுக்க அரசு இடத்தில் எச்சரிக்கை பலகை பூயிலுப்பையில் ஆக்கிரமிப்பை தடுக்க அரசு இடத்தில் எச்சரிக்கை பலகை
பூயிலுப்பையில் ஆக்கிரமிப்பை தடுக்க அரசு இடத்தில் எச்சரிக்கை பலகை
பூயிலுப்பையில் ஆக்கிரமிப்பை தடுக்க அரசு இடத்தில் எச்சரிக்கை பலகை
பூயிலுப்பையில் ஆக்கிரமிப்பை தடுக்க அரசு இடத்தில் எச்சரிக்கை பலகை
ADDED : ஜூன் 29, 2024 11:57 PM

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த பூயிலுப்பை கிராமத்தில், சர்வே எண்: 162, 163, 164ல் மேயக்கால் வகைப்பாட்டை சார்ந்த அரசு இடம் உள்ளது.
இந்த சர்வே எண் சார்ந்த அரசு இடங்களில் ஆக்கிரமிப்பு ஏற்படாத வகையில் பாதுகாக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் சில நாட்களுக்கு முன் வருவாய்த்துறைக்கு கோரிக்கை மனு அளித்தனர்.
அதன் நடவடிக்கையாக, வருவாய்த்துறையினர் அரசு இடங்களை ஆய்வு செய்து, அந்த இடத்தில் எச்சரிக்கை பலகை ஒன்றை வைத்துள்ளனர்.
அதில், பூயிலுப்பை கிராமத்தின் மூன்று சர்வே எண்கள் குறிப்பிடப்பட்டு, அந்த இடங்கள் அரசுக்கு சொந்தமான இடம். இந்த இடத்தில் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவீர்கள் என, குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது:
பூயிலுப்பை மக்கள் அரசு இடத்தில் ஆக்கிரமிப்பு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும் என, கோரிக்கை மனு அளித்தனர்.
எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த இடம் கண்காணிக்கப்படும். மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.