/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ லாரி சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி பெண் பலி லாரி சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி பெண் பலி
லாரி சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி பெண் பலி
லாரி சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி பெண் பலி
லாரி சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி பெண் பலி
ADDED : ஜூன் 15, 2024 12:24 AM
சூணாம்பேடு:விழுப்புரம் மாவட்டம், உப்புவேலுார் கிராமத்தை சேர்ந்தவர் அமுதா, 40.
இவர், நேற்று காலை 10:00 மணிக்கு, உறவினர் ஏழுமலையுடன் அவருக்கு சொந்தமான சுசூகி மொபட்டில், சூணாம்பேடு அடுத்த வயலுார் கிராமத்திற்கு, உறவினரின் துக்க நிகழ்சிக்கு வந்துள்ளார்.
சூணாம்பேடு அடுத்த புதுப்பட்டு சாலை வழியாக வந்தபோது, சாலை சேதமடைந்து இருந்ததால், மொபட் பள்ளத்தில் இறங்கி ஏறியபோது, வாகனத்தின் பின்புறத்தில் அமர்ந்திருந்த அமுதா, தவறி விழுந்துள்ளார்.
அப்போது, எதிரே வந்த கல் குவாரி லாரியின் பின்பக்க சக்கரம் அமுதாவின் தலையில் ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கி, அமுதா சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதையடுத்து, லாரியை அங்கேயே விட்டுவிட்டு, டிரைவர் தப்பியோடினார். சம்பவ இடத்திற்கு வந்த சூணாம்பேடு போலீசார் வழக்குப்பதிந்து, அமுதாவின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின், விபத்து ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து, வழக்கு பதிந்து தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.