/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பள்ளி அருகே குப்பை தேக்கம் இடைக்கழிநாடில் குற்றச்சாட்டு பள்ளி அருகே குப்பை தேக்கம் இடைக்கழிநாடில் குற்றச்சாட்டு
பள்ளி அருகே குப்பை தேக்கம் இடைக்கழிநாடில் குற்றச்சாட்டு
பள்ளி அருகே குப்பை தேக்கம் இடைக்கழிநாடில் குற்றச்சாட்டு
பள்ளி அருகே குப்பை தேக்கம் இடைக்கழிநாடில் குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 29, 2024 01:38 AM

செய்யூர்:இடைக்கழிநாடு பேரூராட்சியில், 21 வார்டுகள் உள்ளன. இங்கு, 50 துாய்மை பணியாளர்கள் வாயிலாக, பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பேரூராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கம் பகுதியில், இரண்டு அரசு பள்ளிகள் மற்றும் இரண்டு தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன.
கிழக்கு கடற்கரை சாலைக்கும், புதுத்தோட்டம் செல்லும் சாலைக்கும் இடையே உள்ள பகுதியில் செயல்படும் கடைகள், உணவகங்களின் கழிவுகள், சாலை ஓரத்தில் கொட்டப்படுவதாகவும், அதே பகுதியில் குப்பையை எரிப்பதாகவும், அப்பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
பள்ளி அருகே குப்பை தேங்குவதால், துர்நாற்றம் வீசி நோய்த்தொற்று பரவும் அபாய நிலை உள்ளது.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, பள்ளி அருகே குப்பை தேங்குவதை அகற்றநடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.