/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ இருளர் பாம்பு பிடிப்போர் கூட்டுறவு சங்கத்திற்கு விருது இருளர் பாம்பு பிடிப்போர் கூட்டுறவு சங்கத்திற்கு விருது
இருளர் பாம்பு பிடிப்போர் கூட்டுறவு சங்கத்திற்கு விருது
இருளர் பாம்பு பிடிப்போர் கூட்டுறவு சங்கத்திற்கு விருது
இருளர் பாம்பு பிடிப்போர் கூட்டுறவு சங்கத்திற்கு விருது
ADDED : ஜூன் 29, 2024 01:40 AM

செங்கல்பட்டு:வடநெம்மேலி இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கத்திற்கு, சிறந்த கூட்டுறவு சங்கத்திற்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், வடநெம்மேலிஇருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கம் செயல்படுகிறது. இந்த சங்கத்திற்கு, தேசிய கூட்டு றவு வளர்ச்சி கழகத்தின் சார்பில், சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கான பிராந்திய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டுறவு சங்கத்தை பாராட்டி, கூட்டுறவுத்துறை அமைச்சர் பாராட்டு சான்றிதழ், கேடயம் மற்றும் 20,000 ரூபாய் வழங்கினார்.
செங்கல்பட்டு கலெக்டர் அலுலகத்தில், கலெக்டர் அருண்ராஜை சந்தித்த சங்க நிர்வாகிகள், சிறந்த கூட்டுறவு சங்கத்திற்கான விருதைக் காண்பித்து, நேற்று முன்தினம் வாழ்த்து பெற்றனர்.
மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் வித்யா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.