Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ வேளாண் தொழில் துவங்க பட்டதாரிகளுக்கு அழைப்பு

வேளாண் தொழில் துவங்க பட்டதாரிகளுக்கு அழைப்பு

வேளாண் தொழில் துவங்க பட்டதாரிகளுக்கு அழைப்பு

வேளாண் தொழில் துவங்க பட்டதாரிகளுக்கு அழைப்பு

ADDED : ஜூன் 30, 2024 10:49 PM


Google News
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், வேளாண் தொழில் துவங்க, பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அசோக் அறிக்கை:

வேளாண்மை நிதிநிலை 2024- - 25ம் நிதியாண்டு அறிக்கையில், பட்டப்படிப்பு முடித்த பட்டதாரி இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில், இளநிலை பட்டப்படிப்பு படித்த இரண்டு இளைஞர்களுக்கு, வேளாண் சார்ந்த தொழில் துவங்க, பட்டதாரி ஒருவருக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

வேளாண் தொழில் முனைவோராக்கும் திட்டத்தில், பட்டதாரி இளைஞர்கள் தங்களது மூலதனத்தில், பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ், அனுமதிக்கக்கூடிய சுய தொழில்கள் செயல்படுத்துவதற்காக, மானியம் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் பயன்பெற, பயனாளிகள் 21 வயது முதல் 40 வயதுடையவராக இருக்க வேண்டும். இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

கணினி திறன் மற்றும் குடும்பத்திற்கு ஒரு பட்டதாரி மட்டுமே, நிதி உதவி பெற தகுதி உடையவர். வங்கி வாயிலாக கடன் பெற்று, தொழில் புரிகின்ற நிறுவனத்தின் உரிமையானது தனி உரிமையாக இருக்க வேண்டும்.

இத்திட்டத்தில் பதிவு செய்ய விருப்பம் உள்ள பட்டதாரிகள், அக்ரிஸ்நெட் இணைய முகப்பில் பதிவு செய்ய வேண்டும்.

தங்களின் விரிவான திட்ட அறிக்கையை, சம்பந்தப்பட்ட வட்டார வேளாண் உதவி இயக்குனரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

கூடுதல் விபரங்களுக்கு, வேளாண்மை இணை இயக்குனர், வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us