/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ வி.ஏ.ஓ., ஆபீஸ் கட்டடம் சேதம் கோப்புகளை பராமரிப்பதில் சிக்கல் வி.ஏ.ஓ., ஆபீஸ் கட்டடம் சேதம் கோப்புகளை பராமரிப்பதில் சிக்கல்
வி.ஏ.ஓ., ஆபீஸ் கட்டடம் சேதம் கோப்புகளை பராமரிப்பதில் சிக்கல்
வி.ஏ.ஓ., ஆபீஸ் கட்டடம் சேதம் கோப்புகளை பராமரிப்பதில் சிக்கல்
வி.ஏ.ஓ., ஆபீஸ் கட்டடம் சேதம் கோப்புகளை பராமரிப்பதில் சிக்கல்
ADDED : ஜூன் 30, 2024 10:50 PM

சித்தாமூர்: சித்தாமூர் அடுத்த கீழ்வசலை கிராமத்தில், கிராம நிர்வாக அலுவலகத்தை, நீலமங்கலம், ஒரங்காவலி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தோர் பயன்படுத்தி வருகின்றனர்.
கிராம நிர்வாக அலுவலக கட்டடம், பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. கட்டடம் முறையாக பராமரிப்பு இல்லாமல் நாளடைவில் பழுதடைந்தது. பின், கடந்த 2016ம் ஆண்டு, 50,000 ரூபாய் மதிப்பீட்டில் சீரமைப்புப் பணி நடந்தது.
இந்நிலையில், தற்போது கட்டடம் மீண்டும் சேதமடைந்து, மேல்தளத்தில் உள்ள சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, மழை காலங்களில் கட்டடத்தில் மழை நீர் கசிந்து கிராம பதிவேடுகளை பாதுகாப்பாக பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து கிராம நிர்வாக அலுவலக கட்டடத்தை சீரமைக்க வேண்டும் அல்லது புதிய கட்டடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.