/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கூட்டுறவு நிறுவனங்கள் ரெடி ரூ.175 கோடி கடன் வழங்க இலக்கு கூட்டுறவு நிறுவனங்கள் ரெடி ரூ.175 கோடி கடன் வழங்க இலக்கு
கூட்டுறவு நிறுவனங்கள் ரெடி ரூ.175 கோடி கடன் வழங்க இலக்கு
கூட்டுறவு நிறுவனங்கள் ரெடி ரூ.175 கோடி கடன் வழங்க இலக்கு
கூட்டுறவு நிறுவனங்கள் ரெடி ரூ.175 கோடி கடன் வழங்க இலக்கு
ADDED : ஜூலை 13, 2024 12:28 AM
செங்கல்பட்டு:கூட்டுறவு வங்கிகள், கடன் சங்கங்கள் உள்ளிட்டகூட்டுறவு அமைப்புகளில், கடன் பெறவிண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
செங்கல்பட்டு மாவட்டத்தில், காஞ்சிபுரம்மத்திய கூட்டுறவுவங்கி கள் - 20, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் - 89,நகர கூட்டுறவு வங்கிகள் - 3, நகர கூட்டுறவுகடன் சங்கங்கள் - 11மற்றும் பல்வேறுகூட்டுறவு சங்கங்கள் இயங்குகின்றன.
அவற்றின் வாயிலாக, பயிர்க்கடன், நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன், வீட்டு வசதி கடன், வீடு அடமான கடன், பணிபுரியும் மகளிர் கடன்,மகளிர் தொழில் முனைவோர் கடன், மாற்றுத்திறனாளி கடன், தாட்கோ கடன் உள்ளிட்டவை அளிக்கப்படுகிறது.
செங்கல்பட்டு மண்டலத்தில், 2024 -25ல், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக, கிசான் காசுக்கடன் திட்டத்தில், பயிர்க்கடன் 140 கோடி ரூபாய் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
கால்நடை பராமரிப்புக் கடன் 20 கோடி ரூபாய். மீனவர் கடன் 15 கோடி ரூபாய் வழங்க இலக்குநிர்ணயிக்கப்பட்டுஉள்ளது. கடனை உரிய காலத்தில் திருப்பி செலுத்தினால், வட்டியும் பெறுவதில்லை.
இதுமட்டுமின்றி, தனிநபர் கடனாக குறைந்த வட்டியில் 30 லட்சம் ரூபாய், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு, அதிகபட்சம் 20 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படுகிறது.
கடன் தேவைப்படுவோர், அருகில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களை, உரிய ஆவணங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.