Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சிற்ப விளக்க கையேடு அளிக்க தொல்லியல் துறை முன்வருமா?

சிற்ப விளக்க கையேடு அளிக்க தொல்லியல் துறை முன்வருமா?

சிற்ப விளக்க கையேடு அளிக்க தொல்லியல் துறை முன்வருமா?

சிற்ப விளக்க கையேடு அளிக்க தொல்லியல் துறை முன்வருமா?

ADDED : ஜூலை 13, 2024 12:29 AM


Google News
மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில் கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு, பிற குடவரைகள் உள்ளிட்ட பல்லவர் கால கலைச்சின்னங்கள் உள்ளன.

இந்த சிற்பங்களை கண்டுகளிக்க வெளிநாடுகள் மற்றும் பிற மாநில மக்கள் வந்து செல்கின்றனர்.

இந்த சிற்பங்களை தொல்லியல் துறை பராமரித்து வருகிறது. இந்த சிற்பங்களை பார்வையிட இந்திய குடிமகன்களுக்கு, தலா 40 ரூபாய், வெளிநாட்டு பயணியருக்கு, தலா600 ரூபாய் என, தொல்லியல் துறை கட்டணம் வசூலித்து வருகிறது.

ஓரிடத்தில் பெறும் நுழைவுச் சீட்டில், அனைத்து சிற்பங்களையும்காணலாம். துவக்கத்தில் அச்சிடப்பட்ட சீட்டுவழங்கப்பட்டது.தற்போது மின்னணு சீட்டு வழங்கப்படுகிறது.

பெரும்பாலானபயணியர் சிற்பங்கள்பற்றி அறியாமல், பொழுது போக்குக்காக காண வருகின்றனர்.

ஆனால், கலைச்சின்னங்களில் ஆர்வமுள்ள சிலர் மட்டுமே வழிகாட்டிக்கு கட்டணம் அளித்துவிபரம் அறிகின்றனர்.

கட்டணம் வசூலிக்கும்தொல்லியல் துறை,பிரதான சிற்பங்கள் அடங்கிய வண்ண படங்கள், அவற்றை உருவாக்கியமன்னர், காலம் உள்ளிட்ட விபரங்கள் மற்றும் வழித்தடம் ஆகிய தகவல்கள், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் இடம்பெற வேண்டும்.

இந்த கையேட்டை, நுழைவுச்சீட்டு பெறுவோருக்கு அளித்தால், பயணியருக்கு பயன்படும்.

இதுகுறித்து தொல்லியல் துறை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us