/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ ஜமாபந்தி நாளில் மின் தடை திருக்கழுக்குன்றத்தில் அவதி ஜமாபந்தி நாளில் மின் தடை திருக்கழுக்குன்றத்தில் அவதி
ஜமாபந்தி நாளில் மின் தடை திருக்கழுக்குன்றத்தில் அவதி
ஜமாபந்தி நாளில் மின் தடை திருக்கழுக்குன்றத்தில் அவதி
ஜமாபந்தி நாளில் மின் தடை திருக்கழுக்குன்றத்தில் அவதி
ADDED : ஜூன் 15, 2024 12:20 AM
திருக்கழுக்குன்றம்:செங்கல்பட்டு மாவட்ட தாலுகாதோறும், கடந்த ஜூன் 12ம் தேதி முதல், வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு 'ஜமாபந்தி' நிகழ்ச்சி நடக்கிறது.
நேற்று மூன்றாம் நாளாக, திருக்கழுக்குன்றம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது.
இந்நிலையில், நேற்று திருக்கழுக்குன்றம், திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளில், துணை மின் நிலைய பராமரிப்பிற்காக, மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதுகுறித்து, நேற்று முன்தினம் மின்வாரியம் அறிவித்தது. ஜமாபந்தி நடத்தாத நாளில் பராமரிக்குமாறு, வருவாய்த்துறை அறிவுறுத்தாத நிலையில், நேற்று காலை 9:00 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
பிற்பகல் 2:00 மணி வரை, மின்சார துண்டிப்பு அறிவிக்கப்பட்ட நிலையில், மாலை 3:45 மணிக்கே, மின் வினியோகம் வழங்கப்பட்டது.
திருக்கழுக்குன்றம் தாலுகா அலுவலகத்தில், ஜெனரேட்டர் உதவியுடன் அலுவலகம் இயங்கியது. தனியார் கணினி மையங்களில் ஜெனரேட்டர் இயக்கப்பட்டதால், ஆவண நகல் எடுக்க, பக்கத்திற்கு 5 - 10 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டது.
மனுக்கள் தட்டச்சு செய்யவும், கூடுதல் கட்டணம் பெறப்பட்டதால், ஜமாபந்திக்கு மனு கொடுக்க வந்த அப்பகுதிவாசிகள் அவதிக்குள்ளாகினர்.