/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ அரசு நிலங்களை மீட்க ஜமாபந்தியில் மனு அரசு நிலங்களை மீட்க ஜமாபந்தியில் மனு
அரசு நிலங்களை மீட்க ஜமாபந்தியில் மனு
அரசு நிலங்களை மீட்க ஜமாபந்தியில் மனு
அரசு நிலங்களை மீட்க ஜமாபந்தியில் மனு
ADDED : ஜூன் 14, 2024 08:47 PM
தாம்பரம்:தாம்பரம் தாலுகாவில், வருவாய் தீர்வாயம் எனும் ஜமாபந்தி நடந்தது. கடைசி நாளான நேற்று, நன்மங்கலம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம், பெரும்பாக்கம், வேங்கைவாசல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள், கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.
அப்போது, வேங்கைவாசல் ஊராட்சியைச் சேர்ந்த மக்கள், அவ்வூராட்சியில் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலங்களை மீட்க வேண்டும் என, மனு கொடுத்தனர்.
வேங்கைவாசல் பிரதான சாலையில் சர்வே எண்: 236ல், 40 சென்ட் களம் புறம்போக்கு நிலம், தனியார் நிறுவனத்தின் ஆக்கிரமிப்பில் உள்ளது.
அதேபோல் சர்வே எண்: 253ல் 2 ஏக்கர் நிலத்தை மீட்டு, அரசு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். புலம் எண்: 78ல் மேய்க்கால் புறம்போக்கு இடத்தில் மண் திருட்டில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குறிப்பிட்டிருந்தனர்.
இது தொடர்பாக, எத்தனையோ முறை புகார் தெரிவித்தும், வருவாய் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியாவது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அந்த ஊராட்சியினர் தெரிவித்தனர்.