/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் பாளையர்மடத்தில் துர்நாற்றம் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் பாளையர்மடத்தில் துர்நாற்றம்
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் பாளையர்மடத்தில் துர்நாற்றம்
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் பாளையர்மடத்தில் துர்நாற்றம்
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் பாளையர்மடத்தில் துர்நாற்றம்
ADDED : ஜூன் 15, 2024 12:27 AM

செய்யூர்:செய்யூர் ஊராட்சிக்கு உட்பட்ட பாளையர்மடம் பகுதியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில், முறையான கழிவுநீர் வடிகால்வாய் வசதி இல்லாமல், பல ஆண்டுகளாக பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சாலை ஓரத்தில் உள்ள சிறிய கால்வாய் வழியாக வெளியேறி வந்தது.
இந்நிலையில், சில நாட்களாக சாலை ஓரத்தில் உள்ள கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால், கழிவு நீர் முழுதும் சாலையில் வழிந்தோடுகிறது.
அதனால், குடியிருப்புப் பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் தொற்று பரவும் அபாய நிலை உள்ளது.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, பாளையர்மடம் பகுதியில் கழிவுநீர் வடிகால்வாய் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துஉள்ளனர்.