/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மின் கட்டணம் செலுத்த 12 கி.மீ., பயணம் மின் கட்டணம் செலுத்த 12 கி.மீ., பயணம்
மின் கட்டணம் செலுத்த 12 கி.மீ., பயணம்
மின் கட்டணம் செலுத்த 12 கி.மீ., பயணம்
மின் கட்டணம் செலுத்த 12 கி.மீ., பயணம்
ADDED : ஜூன் 29, 2024 10:06 PM
திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியத்தில் நெல்லிக்குப்பம் ஊராட்சி உள்ளது. இதனருகே அம்மாபேட்டை, கீழூர், தர்மாபுரி உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளன.
இப்பகுதி மக்கள், மின் கட்டணம் மற்றும் மின் தொடர்பான பல்வேறு பணிகளுக்கு, இரண்டு பேருந்துகள் பிடித்து, 12 கி.மீ., வரை பயணம் செய்து, திருப்போரூர் மின்வாரிய அலுவலகத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால், வீண் அலைச்சல் ஏற்படுகிறது.
நெல்லிக்குப்பத்தில் அடங்கிய அம்மாபேட்டையில், துணை மின் நிலையம் உள்ளது. இங்கு, மின் துறை இளநிலை பொறியாளர் அலுவலகத்தையும் ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.