/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மாமல்லை பேரூராட்சி மன்ற கூட்டம் உயிர் காப்பாளர் நியமனத்திற்கு எதிர்ப்பு மாமல்லை பேரூராட்சி மன்ற கூட்டம் உயிர் காப்பாளர் நியமனத்திற்கு எதிர்ப்பு
மாமல்லை பேரூராட்சி மன்ற கூட்டம் உயிர் காப்பாளர் நியமனத்திற்கு எதிர்ப்பு
மாமல்லை பேரூராட்சி மன்ற கூட்டம் உயிர் காப்பாளர் நியமனத்திற்கு எதிர்ப்பு
மாமல்லை பேரூராட்சி மன்ற கூட்டம் உயிர் காப்பாளர் நியமனத்திற்கு எதிர்ப்பு
ADDED : ஜூன் 29, 2024 10:04 PM
மாமல்லபுரம்:மாமல்லபுரம் பேரூராட்சி மன்ற கூட்டம், கடந்த பிப்ரவரிக்கு பின், நேற்று முன்தினம் தலைவர் வளர்மதி தலைமையில் நடந்தது. துணை தலைவர் ராகவன், செயல் அலுவலர் அருள்குமார், வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கடந்த மே மாதம் உயிரிழந்த இரண்டாவது வார்டு உறுப்பினர் சீனிவாசன், பேரூராட்சி ஊழியர் மூர்த்தி ஆகியோருக்கு, அஞ்சலி செலுத்தி கூட்டத்தை தொடர்ந்தனர்.
குடிநீர் வினியோகம் மற்றும் பாதாள சாக்கடை ஆகியவற்றில் பயன்படுத்தும் மின்மோட்டார்கள், மின் இணைப்புகள் உள்ளிட்டவற்றை, 20 லட்சம் ரூபாய் மதிப்பில் பராமரிப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள குடிநீர் மேல்நிலைநீர்தேக்கத் தொட்டிகளுக்கு, 18.30 லட்சம் ரூபாய் மதிப்பில், குளோரினேஷன் சிஸ்டம்ஸ் மற்றும் 7.10 லட்சம் ரூபாய் மதிப்பில் குடிநீர் அளவுமானி ஆகியவை பொருத்த அனுமதி அளிக்கப்பட்டது.
மேலும், கடற்கரை பகுதியில், 24.5 லட்சம் ரூபாய் செலவில், பேவர் பிளாக் சாலை, மழைநீர் வடிகால் அமைப்பது ஆகிய திட்ட செலவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தலைமை நீரேற்று நிலையத்தில், 4.90 லட்சம் ரூபாய் மதிப்பில், ஜெனரேட்டர் பிளாட்பார்ம், மேற்கூரை அமைத்தது, வார்டு பகுதிகளில், கான்கிரீட், பேவர் பிளாக் சாலைகள், சிறு பாலங்கள் உள்ளிட்டவை என, 27.30 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
தேவனேரி பகுதியில், 35 லட்சம் ரூபாய் மதிப்பில், ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவில், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்க மறு ஒப்பந்தம் கோருவது, பூஞ்சேரி கழிவுநீர் சுத்திகரிப்பு வளாகத்தில், 20 லட்சம் ரூபாய் மதிப்பில், சுற்றுச்சுவர் அமைக்க ஒப்பந்தம் அனுமதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கருக்காத்தம்மன் கோவில் குளம் மேம்பாடு, இரண்டாம் வார்டு, கோவளம் சாலை, கிரான்ட் பே விடுதி அருகில் உள்ள தெருவிற்கு, என்.ஜனார்த்தனன் தெரு என பெயர் சூட்டுவது என, பிற தீர்மானங்களும் நிறைவேறின.
கடல் அலையில் சிக்கியவரை மீட்க, மாவட்ட கலெக்டர் பரிந்துரையில், உயிர் காப்பாளராக கிருஷ்ணராஜ் என்பவர் நியமிக்கப்பட்டதை, மன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து, உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தினர்.
இதை தொடர்ந்து, 'கலெக்டர் பரிந்துரையில் நடந்த நியமன உத்தரவை ரத்து செய்ய இயலாது' என, செயல் அலுவலர் மறுத்ததாக கூறப்படுகிறது.