/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ 547 கிலோ குட்கா முடிச்சூரில் பறிமுதல் 547 கிலோ குட்கா முடிச்சூரில் பறிமுதல்
547 கிலோ குட்கா முடிச்சூரில் பறிமுதல்
547 கிலோ குட்கா முடிச்சூரில் பறிமுதல்
547 கிலோ குட்கா முடிச்சூரில் பறிமுதல்
ADDED : செப் 25, 2025 01:11 AM

முடிச்சூர்:திருப்பதியில் இருந்து கடத்தி வரப்பட்ட 547 கிலோ குட்கா, முடிச்சூரில் பறிமுதல் செய்யப்பட்டது.
தாம்பரத்தை அடுத்த முடிச்சூரில், நேற்று காலை பீர்க்கன்காரணை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மஹிந்திரா காரை மடக்கி சோதனை செய்ததில் அரசால் தடை செய்யப்பட்ட, 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான 547 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
காரில் வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மனோகர் லால், 38, சுரேஷ் குமார், 30, ஆகியோரை கைது செய்த போலீசார், குட்காவை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், திருப்பதியில் போலி நம்பர் பிளேட் பயன்படுத்தி சென்னைக்கு குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது. இவர்களுக்கு குட்கா பொருட்களை சப்ளை செய்த, பெங்களூரைச் சேர்ந்த முக்கிய குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.