/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ வாழப்பட்டு சாலை படுமோசம் சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை வாழப்பட்டு சாலை படுமோசம் சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
வாழப்பட்டு சாலை படுமோசம் சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
வாழப்பட்டு சாலை படுமோசம் சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
வாழப்பட்டு சாலை படுமோசம் சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
ADDED : செப் 25, 2025 01:07 AM

செய்யூர்:வாழப்பட்டு கிராமத்திற்குச் செல்லும் சாலை ஜல்லிகள் பெயர்ந்து கடுமையாக சேதமடைந்துள்ளதால், சீரமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்யூர் அடுத்த வாழப்பட்டு கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
செய்யூர் - சூணாம்பேடு மாநில நெடுஞ்சாலையில் இருந்து வாழப்பட்டு கிராமத்திற்குச் செல்லும் 1 கி.மீ., தார்ச்சாலை உள்ளது.
தினமும் இருசக்கர வாகனம், கார், லாரி என, ஏராளமான வாகனங்கள் இச்சாலையில் சென்று வருகின்றன.
தற்போது, இந்த சாலை பழுதடைந்து ஜல்லிகள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளதால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளி மாணவ - மாணவியர் சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும், மழைக்காலத்தில் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்குவதால், புதிதாக சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பள்ளத்தில் சிக்கி தடுமாறி விபத்துக்குள்ளாகின்ற னர்.
எனவே, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, வாழப்பட்டு கிராம சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக் கை வைத்துள்ளனர்.