/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ செங்கை புறநகர் பேருந்து நிலையம் டிசம்பரில் பயன்பாட்டிற்கு வரும் ;அமைச்சர் அன்பரசன் தகவல் செங்கை புறநகர் பேருந்து நிலையம் டிசம்பரில் பயன்பாட்டிற்கு வரும் ;அமைச்சர் அன்பரசன் தகவல்
செங்கை புறநகர் பேருந்து நிலையம் டிசம்பரில் பயன்பாட்டிற்கு வரும் ;அமைச்சர் அன்பரசன் தகவல்
செங்கை புறநகர் பேருந்து நிலையம் டிசம்பரில் பயன்பாட்டிற்கு வரும் ;அமைச்சர் அன்பரசன் தகவல்
செங்கை புறநகர் பேருந்து நிலையம் டிசம்பரில் பயன்பாட்டிற்கு வரும் ;அமைச்சர் அன்பரசன் தகவல்
ADDED : செப் 25, 2025 01:19 AM

செங்கல்பட்டு:''மலையடி வேண்பாக்கத்தில் கட்டப்படும் செங்கல்பட்டு புதிய புறநகர் பேருந்து நிலைய பணிகள் முடிந்து, வரும் டிசம்பர் மாதம் பயன்பாட்டிற்கு வரும்,'' என, அமைச்சர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு நகரில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க, புதிய பேருந்து நிலையம் மற்றும் அரசு போக்குவரத்து கழக பணிமனை ஆகியவற்றை, நகருக்கு வெளியே அமைக்க வேண்டுமென பொதுமக்கள், அரசியல் கட்சியினர் தொடர்ந்து அரசிடம் வலியுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து, ஆலப்பாக்கம் ஊராட்சி, மலையடி வேண்பாக்கம் கிராமத்தில், அரசு மருத்துவக் கல்லுாரிக்குச் சொந்தமான 9.95 ஏக்கர் நிலத்தில், செங்கல்பட்டு புதிய புறநகர் பேருந்து நிலையம், அரசு போக்குவரத்து கழக பணிமனை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் இடம் ஒப்படைக்கப்பட்டது.
அதன் பின், செங்கல்பட்டு புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்க, 130 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 'டெண்டர்' விடப்பட்டது. இதைத்தொடர்ந்து, மலையடி வேண்பாக்கம் கிராமத்தில், செங்கல்பட்டு புதிய புறநகர் பேருந்து நிலைய பணிக்கு, முதல்வர் ஸ்டாலின் 2023 நவ., 15ம் தேதி, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலமாக அடிக்கல் நாட்டி, பணியை துவக்கி வைத்தார்.
அதன் பின், புறநகர் பேருந்து நிலைய பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணியை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப் பின், பேருந்து பணிமனை மற்றும் புறநகர் பேருந்து நிலையம் தனியாக அமைக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். புறநகர் பேருந்து நிலைய பணிகள் 70 சதவீதம் முடிந்துள்ளன.
அனைத்து பணிகளும் முடிந்து, வரும் டிசம்பர் மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என, அமைச்சர் தெரிவித்தார்.
கலெக்டர் சினேகா, செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார், சப்- கலெக்டர் மாலதி ஹெலன், நகராட்சிகள் மண்டல இணை இயக்குநர் லட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.