/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ உடைந்த இரும்பு சட்டம் சீரமைப்பு வாகன ஓட்டிகள் நிம்மதி உடைந்த இரும்பு சட்டம் சீரமைப்பு வாகன ஓட்டிகள் நிம்மதி
உடைந்த இரும்பு சட்டம் சீரமைப்பு வாகன ஓட்டிகள் நிம்மதி
உடைந்த இரும்பு சட்டம் சீரமைப்பு வாகன ஓட்டிகள் நிம்மதி
உடைந்த இரும்பு சட்டம் சீரமைப்பு வாகன ஓட்டிகள் நிம்மதி
ADDED : செப் 25, 2025 01:05 AM

கிளாம்பாக்கம்:நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் நுழைவாயில் அருகே, உடைந்த நிலையிலிருந்த இரும்பு சட்டம் மற்றும் மண் வடிகட்டியை, அதிகாரிகள் சீர் செய்தனர்.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தின் நுழைவாயில் அருகே, ஜி.எஸ்.டி., சாலையில், மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வடிகாலில் தேங்கும் மண்ணை அகற்ற, ஐந்து அடி இடைவெளியில், 30க்கும் மேற்பட்ட மண் வடிகட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இதில் ஒரு மண் வடிகட்டியின் மேல் பொருத்தப்பட்டிருந்த இரும்பு சட்டம் உடைந்து, ஐந்து அடி ஆழம், மூன்று அடி விட்டத்தில் பெரும் பள்ளம் ஏற்பட்டது.
இந்த பள்ளத்தை ஒட்டியே ஜி.எஸ்.டி., சாலையில் வாகனங்கள் பயணிப்பதால், கவனக்குறைவாக வாகனங்களின் சக்கரங்கள் இதில் சிக்கி, பெரும் அசம்பாவிதம் நடக்க வாய்ப்பிருந்தது.
இதுகுறித்து நம் நாளிதழில், செய்தி வெளியானது. இதையடுத்து, உடைந்த இரும்பு சட்டம் மற்றும் மண் வடிகட்டியை அதிகாரிகள் சீர் செய்தனர்.
தவிர, உடையும் நிலையில் இருந்த மண் வடிகட்டிகளையும் சீர் செய்தனர். இதனால், வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர்.