/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ விழும் நிலையிலுள்ள ரேஷன் கடை இடித்து புதிதாக கட்ட கோரிக்கை விழும் நிலையிலுள்ள ரேஷன் கடை இடித்து புதிதாக கட்ட கோரிக்கை
விழும் நிலையிலுள்ள ரேஷன் கடை இடித்து புதிதாக கட்ட கோரிக்கை
விழும் நிலையிலுள்ள ரேஷன் கடை இடித்து புதிதாக கட்ட கோரிக்கை
விழும் நிலையிலுள்ள ரேஷன் கடை இடித்து புதிதாக கட்ட கோரிக்கை
ADDED : ஜூன் 12, 2025 02:28 AM

அச்சிறுபாக்கம்:பாபுராயன்பேட்டையில், சேதமடைந்து இடிந்து விழும் நிலையிலுள்ள ரேஷன் கடை கட்டடத்தை இடித்துவிட்டு, புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கிராமத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் அருகே பாபுராயன்பேட்டை ஊராட்சியில், 24 ஆண்டுகளுக்கு முன் ரேஷன் கடைக்கு கட்டடம் கட்டப்பட்டு, செயல்பட்டு வந்தது.
இந்த கடையை, 300க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது, கட்டடத்தின் சில பகுதிகளில் விரிசல் ஏற்பட்டு, பருவ மழைக் காலங்கள் மற்றும் கோடை மழையில் நீர்க்கசிவு ஏற்படுகிறது.
கட்டடத்தின் சில பகுதிகள், இடிந்து விழுந்துள்ளன. இதனால், இங்கு இருப்பு வைக்கப்படும் அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்களை பாதுகாப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.
எனவே, பழைய ரேஷன் கடை கட்டடத்தை இடித்துவிட்டு, புதிதாக கட்டித் தர வேண்டுமென, கிராமத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.