/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ படூர் ஊராட்சியில் புதிதாக அங்கன்வாடி திறப்பு படூர் ஊராட்சியில் புதிதாக அங்கன்வாடி திறப்பு
படூர் ஊராட்சியில் புதிதாக அங்கன்வாடி திறப்பு
படூர் ஊராட்சியில் புதிதாக அங்கன்வாடி திறப்பு
படூர் ஊராட்சியில் புதிதாக அங்கன்வாடி திறப்பு
ADDED : ஜூன் 12, 2025 02:29 AM

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த படூர் ஊராட்சியில், ஊராட்சி நிர்வாகம், ரோட்டரி கிளப், எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் அமைப்பு சார்பில், 22 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு உள்ளது.
இதன் திறப்பு விழா, நடந்தது. ஊராட்சி தலைவர் தாரா தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக திருப்போரூர் ஒன்றியக்குழு தலைவர் இதயவர்மன், அப்டஸ் நிதி நிறுவனத்தின் நிறுவனர் ஆனந்தன், ரோட்டரி கிளப் மாவட்ட ஆளுநர் சரவணன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் பூர்ணிமா பங்கேற்று அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தனர்.
தொடர்ந்து, இதில் ஆரம்ப கல்வி பயிலும், 25 குழந்தைகளுக்கு இனிப்பு, சீருடைகள் வழங்கப்பட்டன.
அதேபோல், கானத்துார் பகுதியிலும், 21 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையம், நேற்று திறக்கப்பட்டது.