Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மின்சாதனங்கள் அருகில் செல்லாதீர் மக்களுக்கு வாரியம் எச்சரிக்கை

மின்சாதனங்கள் அருகில் செல்லாதீர் மக்களுக்கு வாரியம் எச்சரிக்கை

மின்சாதனங்கள் அருகில் செல்லாதீர் மக்களுக்கு வாரியம் எச்சரிக்கை

மின்சாதனங்கள் அருகில் செல்லாதீர் மக்களுக்கு வாரியம் எச்சரிக்கை

ADDED : அக் 18, 2025 10:38 PM


Google News
செங்கல்பட்டு: மழைக்காலங்களில் மின்கம்பம், மின்மாற்றி உள்ளிட்ட மின்சாதனங்கள் அருகில் செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என, மின்வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

செங்கல்பட்டு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அன்புச்செல்வன் அறிக்கை:

காற்று மற்றும் மழைக்காலங்களில் மின்கம்பம், மின்மாற்றி மற்றும் மின்பகிர்வு பெட்டி அருகில் மக்கள் செல்ல வேண்டாம். மின் கம்பி அறுந்து கிடந்தால், அதை தொடாமல் உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

மின் பாதைக்கு அருகிலுள்ள மரக்கிளைகளை, மின் ஊழியர்கள் துணையோடு மட்டுமே வெட்ட வேண்டும். மின்கம்பத்தின் அருகில் உள்ள இழுவை கம்பியிலோ, மின்கம்பத்திலோ கயிறு கட்டி, துணிகளை உலர்த்தக் கூடாது.

இடி, மின்னலின் போது மின் கம்பங்கள், மின்மாற்றிகள் மற்றும் துணைமின் நிலையங்கள் போன்ற இடங்களில் நிற்கக் கூடாது, 'டிவி, மிக்சி, கிரைண்டர்' கணினி உள்ளிட்ட மின் சாதனங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

ஈரமான கைகளால் மின் 'சுவிட்ச்'சுகளை இயக்க முயற்சிக்க வேண்டாம். மின் புகார் குறித்து 94987 94987 என்ற எண்ணில், 24 மணி நேர புகார் மையத்திற்கு தெரிவிக்கலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us