/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ டாஸ்மாக் ஊழியர்களை தாக்கிய இருவர் கைது டாஸ்மாக் ஊழியர்களை தாக்கிய இருவர் கைது
டாஸ்மாக் ஊழியர்களை தாக்கிய இருவர் கைது
டாஸ்மாக் ஊழியர்களை தாக்கிய இருவர் கைது
டாஸ்மாக் ஊழியர்களை தாக்கிய இருவர் கைது
ADDED : அக் 18, 2025 10:37 PM
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றத்தில், டாஸ்மாக் ஊழியர்களை தாக்கிய இரண்டு பேரை, போலீசார் கைது செய்தனர்.
திருக்கழுக்குன்றம் புறவழிப்பாதையில், டாஸ்மாக் கடை இயங்குகிறது.
திருக்கழுக்குன்றம், பரமசிவம் நகரைச் சேர்ந்த அருண்குமார், 45, பார்த்திபன், 40, ஆகியோர், கடந்த 15ம் தேதி, இந்த கடைக்குச் சென்று, இலவசமாக மது தருமாறு கேட்டுள்ளனர்.
அதற்கு மறுப்பு தெரிவித்த கடை விற்பனையாளர்கள் சரவணன், 49, அன்பழகன், 45, ஆகியோரை, காலி பாட்டிலால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து, திருக்கழுக்குன்றம் போலீசில் சரவணன் அளித்த புகாரின்படி, மேற்கண்ட இரண்டு பேரையும், போலீசார் நேற்று கைது செய்தனர்.


