Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் சீசன் துவங்கியது

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் சீசன் துவங்கியது

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் சீசன் துவங்கியது

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் சீசன் துவங்கியது

ADDED : செப் 26, 2025 03:36 AM


Google News
Latest Tamil News
மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு பறவைகள் வரத்தால், சீசன் துவங்கி உள்ளது.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய ஏரி, 86 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில், 16 அடி நீர்ப்பிடிப்பு கொண்டது.தற்போது, ஏரியில் 5 அடிக்கும் அதிகமாக தண்ணீர் உள்ளது.

வங்கதேசம், மியான்மர், இலங்கை, சைபீரியா, ஆஸ்திரேலியா மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பறவைகள் வேடந்தாங்கலுக்கு வந்து தங்கி, இனப்பெருக்கம் செய்யும்.

பின், மீண்டும் தங்கள் நாடுகளுக்கு புறப்பட்டுச் செல்லும்.குறிப்பாக, செப்டம்பர் மாதத்தில் பறவைகள் வரத்துவங்கும். ஆனால், செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில், பறவைகள் வரத்து இல்லாமல், வேடந்தாங்கல் வெறிச்சோடி இருந்தது. தற்போது, செப்டம்பர் கடைசி வாரத்தில் பறவைகள் வரத்து அதிகரித்துள்ளது.

தற்போது சரணாலயத்தில் நத்தை கொத்திநாரை, செங்கால் நாரை, கூழைக்கடா, வக்கா, நீர்க்காகம், பாம்புதாரா மற்றும் வெள்ளை அரிவாள் மூக்கன் உள்ளிட்ட இனங்களைச் சேர்ந்த 2,000க்கும் அதிகமான பறவைகள் உள்ளன.

தற்போது மழையும் பெய்து வருவதால், ஏரிக்கு நீர்வரத்து துவங்கியுள்ளது. அதனால், ஏரிக்கு நீர்வரத்து வரும் கால்வாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பறவை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us