/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஆம்ஸ்ட்ராங் கொலையில் சிக்கிய அஞ்சலை மற்றொரு வழக்கில் கைது ஆம்ஸ்ட்ராங் கொலையில் சிக்கிய அஞ்சலை மற்றொரு வழக்கில் கைது
ஆம்ஸ்ட்ராங் கொலையில் சிக்கிய அஞ்சலை மற்றொரு வழக்கில் கைது
ஆம்ஸ்ட்ராங் கொலையில் சிக்கிய அஞ்சலை மற்றொரு வழக்கில் கைது
ஆம்ஸ்ட்ராங் கொலையில் சிக்கிய அஞ்சலை மற்றொரு வழக்கில் கைது
ADDED : ஜூலை 26, 2024 12:14 AM
சென்னை, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அஞ்சலையை, பேசின்பாலம் காவல்நிலைய போலீசார் கந்து வட்டி வழக்கில் கைது செய்துள்ளனர்.
புதுப்பேட்டையை சேர்ந்தவர் முகமது அசாருதீன்,37. இவர் அஞ்சலையிடம் 30 லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
வட்டியுடன் சேர்த்து 67 லட்ச ரூபாய் கட்டிய நிலையில், மீண்டும் பணம் கேட்டு முகமது அசாருதீனை அஞ்சலை மற்றும் கூட்டாளிகள் மிரட்டியுள்ளனர்.
இதுகுறித்து கடந்த மே 9ம் தேதி, பேசின்பாலம் காவல்நிலையத்தில், முகமது அசாருதீன் புகார் அளித்தார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அஞ்சலை மட்டுமின்றி அவரது மகள் சங்கீதாவும் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கில், எழும்பூர் நீதிமன்றத்தில் இருவரும் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அடுத்த மாதம் 8 ம் தேதி நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.