/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தற்காலிக பணியாளர் நியமனம் மண்டல கூட்டத்தில் வாக்குவாதம் தற்காலிக பணியாளர் நியமனம் மண்டல கூட்டத்தில் வாக்குவாதம்
தற்காலிக பணியாளர் நியமனம் மண்டல கூட்டத்தில் வாக்குவாதம்
தற்காலிக பணியாளர் நியமனம் மண்டல கூட்டத்தில் வாக்குவாதம்
தற்காலிக பணியாளர் நியமனம் மண்டல கூட்டத்தில் வாக்குவாதம்
ADDED : ஜூலை 13, 2024 12:30 AM
ராயபுரம், ராயபுரம் மண்டலத்தில், மாதாந்திர மண்டல குழு கூட்டம் நேற்று அலுவலக கூட்ட அரங்கில், வடக்கு வட்டார துணை கமிஷனர் ரவி கட்டா தேஜா, மண்டல குழு தலைவர் ஸ்ரீராமலு தலைமையில் நடந்தது.
துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறை குறித்தும், மழைநீருடன் கழிவுநீர் அடைப்பு குறித்தும் கவுன்சிலர்கள் பிரச்னை எழுப்பினர். தற்காலிக பணியாளர்களை நியமிப்பதில், சுகாதார துறை அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுவதாகவும் கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.
'கவுன்சிலர்கள் தான் சரியாக வேலை செய்யவில்லை' என, ராயபுரம் மண்டல நல அதிகாரி வேல்முருகன் பதிலளித்தார். இதனால், இருதரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அருகில் இருந்த துப்புரவு அலுவலர் வாசுதேவன் பேச முயல, அவரிடமும் மண்டல குழு தலைவர் ஸ்ரீராமலு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின், நான்கு இடங்களில் 2.20 கோடி ரூபாய் செலவில் புதிதாக மழைநீர் வடிகால் அமைப்பது, 62 வது வார்டில் 43 லட்சம் ரூபாயில் புதிய சுகாதார நலவாழ்வு மையம் அமைத்தல், 15 வார்டுகளில் தற்காலிக துப்புரவு பணியாளர்கள் 135 பேரை நியமிப்பது உள்ளிட்ட 43 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.