/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பறவைகள் சரணாலயமாகிறது சாத்தாங்காடு ஏரி திருவொற்றியூர் மண்டல கூட்டத்தில் தீர்மானம் பறவைகள் சரணாலயமாகிறது சாத்தாங்காடு ஏரி திருவொற்றியூர் மண்டல கூட்டத்தில் தீர்மானம்
பறவைகள் சரணாலயமாகிறது சாத்தாங்காடு ஏரி திருவொற்றியூர் மண்டல கூட்டத்தில் தீர்மானம்
பறவைகள் சரணாலயமாகிறது சாத்தாங்காடு ஏரி திருவொற்றியூர் மண்டல கூட்டத்தில் தீர்மானம்
பறவைகள் சரணாலயமாகிறது சாத்தாங்காடு ஏரி திருவொற்றியூர் மண்டல கூட்டத்தில் தீர்மானம்
ADDED : ஜூலை 13, 2024 12:30 AM
திருவொற்றியூர், சாத்தாங்காடு ஏரியை 150 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்து, பறவைகள் சரணாலயம் அமைக்க, திருவொற்றியூர் மண்டல குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம், நேற்று, மண்டல குழு தலைவர் தனியரசு தலைமையில், நடந்தது. இதில், மண்டல உதவி கமிஷனர் நவேந்திரன், செயற்பொறியாளர்கள் சகுபர் உசேன், பாபு மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
இதில், சாத்தாங்காடு ஏரியில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, 150 ஏக்கர் பரப்பளவில் பறவைகள் சரணாலயம் அமைக்க நடவடிக்கை எடுத்தல் உட்பட, 173 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், பல்வேறு பிரச்னைகளை கவுன்சிலர்கள் எழுப்பினர். குறிப்பாக, குடிநீர் பிரச்னை குறித்து கடும் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன.
இதற்கு பதிலளித்து, தி.மு.க., மண்டல குழு தலைவர் தனியரசு கூறியதாவது:
வார்டு, 2, 7 மற்றும் 14 ஆகிய வார்டுகளில் குடிநீர் பிரச்னை குறித்து, அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு மாதத்தில் குடிநீர் பிரச்னை தீர்க்கப்படும். வார்டிற்கு தலா, ஐந்து அடிபம்புகள் வழங்கப்பட்டன. அவை எங்கே போனது.
கவுன்சிலர்கள் கவனத்திற்கின்றி, வார்டு மாற்றி அடி பம்புகளை பொருத்தக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
சில கவுன்சிலர்கள் சிறிய மழைக்கே, பல பகுதிகள் சகதிக்காடாக மாறுவது குறித்து பிரச்னை எழுப்பினர். சிலர், தங்கள் சொந்த செலவில் சாலைகளை பழுது பார்த்ததாக தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்து, மண்டல உதவி கமிஷனர் நவேந்திரன் கூறியதாவது:
சுரங்ப்கபாதையில் மழைநீரை அகற்றும் பணிக்கான, நான்கு மோட்டர்களில் மூன்று மோட்டர்கள் பழுதாகின. பின், அவை சீரமைக்கப்பட்டு விட்டன. வார்டு, 7 ல், மோசமான, 18.88 கி.மீ., துார 8-0 சாலைகள் சீரமைக்கும் பணிக்கான திட்டவரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. மழைக்காக, அதிகாரிகள் மேற்பார்வையில் செய்யப்பட்ட பணிக்கு, தொகை வழங்கப்பட்டு விட்டது. கவுன்சிலர்களின் தனிப்பட்ட செலவிற்கு பொறுப்பேற்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாதவரம் மண்டல கவுன்சிலர்கள் குழு கூட்டம் நேற்று முன்தினம் மண்டல அலுவலக வளாகத்தில் 25வது மண்டல குழு தலைவர் நந்தகோபால் தலைமையில் நடந்தது. தெரு பெயர் பலகைகள் சாலை வெட்டுகள் சீரமைப்பது உள்ளிட்ட, 94 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வார்டு 25ல் அண்ணா நகர் இரண்டாவது தெருவில், 9.98 லட்சம் ரூபாய் செலவில் சிமென்ட் சாலை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.