/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து வரும் 19ம் தேதி ஆர்ப்பாட்டம் தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து வரும் 19ம் தேதி ஆர்ப்பாட்டம்
தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து வரும் 19ம் தேதி ஆர்ப்பாட்டம்
தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து வரும் 19ம் தேதி ஆர்ப்பாட்டம்
தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து வரும் 19ம் தேதி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 14, 2024 12:37 AM
பழனிசாமி
சென்னை, தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தி.மு.க., அரசை கண்டித்து, வரும் 19ம் தேதி சிட்லப்பாக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும் என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தி.மு.க., அரசு மக்கள் பிரச்னைகளை தீர்த்து வைப்பதில், எவ்வித அக்கறையும் காட்டாமல், வெற்று தம்பட்டம் அடித்து வருவதில் மட்டுமே, முழு கவனம் செலுத்தி வருகிறது.
தாம்பரம் மாநகராட்சி, மூன்றாவது மண்டலத்திற்கு உட்பட்ட, சிட்லப்பாக்கம், செம்பாக்கம் பகுதிகளில், அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படாததால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அ.தி.மு.க., ஆட்சியில், 25 கோடி ரூபாயில், சிட்லப்பாக்கம் ஏரி மேம்பாட்டு பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் நடந்து வந்தன. தி.மு.க., ஆட்சியில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, இப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
கடந்த ஆறு மாதங்களாக, குடிநீர் வினியோகம் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
மாடம்பாக்கம் ஏரி முறையான பராமரிப்பு இல்லாததால், கிணறுகளை சுற்றி கழிவுநீர் தேங்கி, குடிநீரின் தன்மை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறை வேற்றத் தவறிய, தி.மு.க., அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், பாதாள சாக்கடை திட்டத்தை விரைவாக அமல்படுத்த வலியுறுத்தியும், கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தியும், அ.தி.மு.க., சார்பில் சிட்லப்பாக்கம் முதல் மற்றும் இரண்டாவது பிரதான சாலை சந்திப்பில், வரும் 19ம் தேதி மாலை 4:00 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டம், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் தலைமையில், முன்னாள் அமைச்சர் சின்னையா முன்னிலையில், நடக்கும். இதில் கட்சியினர், பொதுமக்கள் திரளாக பங்கேற்கவேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.