ADDED : ஜூலை 14, 2024 12:35 AM
வடபழனி, சென்னை, அடையாறு பசுமை வழிச்சாலை, அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் சரவணன், 51; ஆட்டோ ஓட்டுனர். இவர், நேற்று முன்தினம் காலை ஆட்டோவில் பட்டினப்பாக்கத்தில் இருந்து வடபழனி கோவிலுக்கு சவாரி வந்தார்.
ஆட்டோவை, வடபழனி முருகன் கோவில் குளக்கரை அருகே நிறுத்தி, கோவில் பகுதிக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, ஆட்டோ திருடப்பட்டது தெரிய வந்தது.
இது குறித்து வடபழனி போலீசார் விசாரிக்கின்றனர்.